Thursday, July 4, 2013

சொல்லும் வலியும் ( The Feeling Of HURT )

                      
சொல்லும் வலியும்
-----------------------------------
  -          The Cry of words ......Each word carry Power, Value & emotions, choose it genuinely....
                                    


ஒன்றை இழந்தவரை  தெரியவில்லை
               அது இருந்தது என்னிடமேன்றே ................     

ஒன்றை  உடைத்தவரை அறியவில்லை
          உடைந்தது நான் என்றே........

ஒன்றை பிரியும் வரை எட்டவில்லை
            பிரிந்தது என் நிழல் என்றே...................

வார்த்தைகளை கொட்டியவரை  தெளியவில்லை
            வருந்துவது நான் என்றே.............

சில்லரையாய்  சிரித்த நீ  மௌனத்தை முத்தமிட
            சின்னதாய்  நான் சீற்றமிட  சிந்தனையில்  ஆழ்ந்துவிட்டேன்....

ஆலமரத்து கிளி இரண்டு வாழை அடி வாழையாய் வட்டமிட
           கிளி ஜோதிடர்  கைகளிலே வசப்பட்டு கொண்டதுவே........

பிரிந்திருக்கும் தண்டவாளத்தை  - சேர்த்துவைக்கும் ரயிலும் கூட...
          இன்று  எம் செயல்  கண்டு  தலை குனிந்து தடம் புரண்டதுவே .....

அழகாய் ஓடும் அணிலும் கூட ..............
          காணா  முகம் காட்டி அனிச்சை செயல் செய்ததுவே ................



காட்டு  விலங்குகள்  ஊருக்குள் ஊர்ந்துவர......
            பார்த்த  பருந்துகள் கொடூரமாய் வட்ட மிட
கொண்று விட்ட மாமிசம் உண்ண
                                               உந்துதல் இல்லாமல்                     
அகப்பட்ட என்னை கண்டு
                         திரும்பி காட்டுக்குள்   சென்றதுவே.........


மதம் கொண்ட யானையிலிருந்து,    மதில்   தாண்டும்  பூனை   வரை
                         மதிகெட்டு போனதை மன்றத்தில் உரைத்ததுவே ..........
                     

கனரக பேருந்து சாய்வது போல் சத்தமிட....
           விண்ணில் விமானம் வீழ்வது போல் சுற்றி வர ..
கடலில் அலைகள் வேகத்தில் வேப்பமிட ..........
                    சூறாவளியில் சிக்கி சுறாவும் சுருண்ட விழ ..........
ஆரவாரம்  இல்லாமல் அமைதியாய்
                               எனை மறந்து பிணமாய் நான் நடந்தேன் ....


விண்ணை தொட்ட கோபுரமாய் நானிருந்தேன்  சௌக்கியமாய்
                  விஷம் கொண்ட பெருநாகம்  (கோபம்)   தீண்டியவுடன் ...
 சகதியாய் சரிந்துவிட்டேன் சந்தேகம் இல்லாமல் ............


              
 
உன் விருப்பம் இல்லாமல் உன்னை சுட்ட வார்த்தைகளை,
                 அள்ளி அள்ளி தழுவிக்கொண்டு என்னை சாடி பார்க்கின்றேன் ....
  உன் அனுமதி இல்லாமல் உனக்குள்ளே  சென்றதுவே
                          படைத்தவனை கேட்காமல் திரும்பி வர மறுக்கிறது ....
  கூடாரம் போட்டு கொண்டு சேதாரம் செய்கிறது ......


 உன் கண்ணோரம் எட்டி பார்த்து,  நான் படைத்த ஓசைகள்
  ஒய்யாரமாய் கேட்கிறது ...
                     ஆதாரம் இல்லாமல் ஏன் படைத்தாய்  என்னை என்று?
 மரக்கதவின் இடையினிலே    உயிர் விட்ட உயிரினமாய்
                    ரத்தஓட்டம் இல்லாமல் ஒளிந்து விட்டேன் எனக்குள்ளே 


 முறிந்து  விட்ட எலும்புதனை ஒட்ட  வைக்க  முடியாது
                               மருத்துவமே சொல்கிறதே .....
             
கிழிந்து போன உறவினையும் புண் பட்ட நெஞ்சினையும் ஒட்ட வைக்க
                 நினையாமல், நண்பர்களாய் இருந்திடவே மனிதத்தை கைப்பிடிப்பேன்...

 அடுத்த ஜன்மம் இருந்துவிட்டால் உன் மன்னிப்பில் உயிர்த்தெழுவேன்
                எண்ணிக்கையில் வார்த்தைகளை செலவுதனை செய்திடுவேன்....
மனிதர்களை புரிந்திடவும் ஆணவம் அழிந்திடவும்
                 பரந்தாமன் காலினையே நீக்கமற பற்றி கொள்வேன்....



என்றும் நட்புடன்,
Dhana ( தனா )


Never Hurt Anyone.........